வங்கிக் கணக்கில் விஜய் செலுத்திய ரூ.20 லட்சத்தை கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினர் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் அதேபோல காயமடைந்தோருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி கட்சி சார்பில் வழங்கப்பட்ட நிலையில், அவர்களை இன்று சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் தனியார் அரங்கில் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியே சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் வங்கிக் கணக்கில் விஜய் செலுத்திய ரூ.20 லட்சத்தை கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக கூட்ட நெரிசலில் சிக்கி கணவரை இழந்த சங்கவி என்பவர் அளித்த பேட்டியில், “விஜய் நேரில் வர வேண்டும், நாங்களாக தேடி செல்ல விருப்பம் இல்லை. நான் சென்னைக்கு செல்லாத நிலையில், உயிரிழந்த எனது கணவர் ரமேஷின் தங்கையை தவெகவினர் சென்னை சென்றுள்ளனர்” என்றார்.