நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு விஷயமும் நமது முன்னேற்ற பாதையாக அமைக்க வேண்டும். சிலர் விரலில் சிறு காயம் ஏற்பட்டால் கூட, வாழ்க்கையில் பின்னடைவாக சந்திப்பார்கள். அந்தவகையில், டெல்லியை சேர்ந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சோனிகா யாதவ் (Sonika Yadav), பெண்கள் யாரும் செய்ய தயங்கும் ஒரு விஷயத்தை எளிதாக செய்து சாதனை படைத்துள்ளார். அதாவது, சோனிகா யாதவ் தனது 7 மாத கர்ப்ப காலத்தில் (Pregnancy) பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்று 145 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது இப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
ALSO READ:ICUவில் இருந்து வெளியே வந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. சிட்னிக்கு செல்லும் குடும்பத்தினர்..!
7 மாத கர்ப்பிணியாக 145 கிலோ:ஆந்திராவில் நடைபெற்ற அகில இந்திய போலீஸ் பளுதூக்குதல் கிளஸ்டர் 2025-26 போட்டியில் 84+ கிலோ பிரிவில் சோனியா யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், இந்தப் போட்டியில் சோனியா யாதவ் 145 கிலோவைத் தூக்கினார். கடந்த 2025 மே மாதம் சோனிகா யாதவ் கர்ப்பம் அடைந்தார். இதன்பிறகு, வழக்கமாக ஜிம் சென்று பயிற்சி மேற்கொள்ளும் சோனியா யாதவை, அவரது கணவர் ஜிம் செல்லுவதற்கு அனுமதிக்க மாட்டார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், சோனிகா தனது கர்ப்ப காலத்திலும் தனது பயிற்சியைத் தொடர உறுதியாக இருந்தார். சோனிகா தனது கர்ப்பத்தின் ஏழு மாதங்கள் வரை பயிற்சி செய்வதை ஊக்குவித்தார்.
தொடர்ந்து, பளு தூக்குதலின்போது, போது, சோனியா யாதவ் ஸ்குவாட்ஸில் 125 கிலோகிராம், பெஞ்ச் பிரஸ்ஸில் 80 கிலோகிராம் மற்றும் டெட்லிஃப்டில் 145 கிலோகிராம் எடையைத் தூக்கினார். இதன் மூலம் போட்டியின் போது அவரது மொத்த எடை தூக்குதல் 350 கிலோ வரை அடுத்தடுத்து தூக்கினார். இதையடுத்து, சோனிகா யாதவின் துணிச்சலான செயலை பாராட்டி டெல்லி காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வாழ்த்தியுள்ளது.
ALSO READ: காயத்தால் விலகிய பிரதிகா ராவல்.. ஸ்மிருதியுடன் தொடக்கம் தரப்போவது யார்..?
சோனிகா யாதவ் பளு தூக்கிய காட்சி:🏋️♀️Defying limits, redefining strength💪
W/Ct. Sonika of @DcpNorthDelhi clinched Bronze medal at the All India Police Weightlifting Cluster 2025-26, Amravati (A.P.), lifting a total of 350 kg in 84+ kg category — while 7 months pregnant!
True embodiment of strength, courage &… pic.twitter.com/F9jqYdXAFB
— Delhi Police (@DelhiPolice)
பளு தூக்குதல் போட்டியின்போது சோனிகா யாதவ் தளர்வான ஆடைகளை அணிந்திருந்ததால் அவர் கர்ப்பமாக இருந்ததை யாரும் அறியவில்லை. பெஞ்ச் பிரஸ்ஸூக்கு பிறகு, சோனிகா யாதவின் கணவர் அவருக்கு எழுந்திருக்க உதவினார். இதன் பிறகு, அனைவரும் இதை அறிந்து, முழு அரங்கமும் கைதட்டி உற்சாகப்படுத்தியது. மற்ற அணிகளைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரிகள் அவளை வாழ்த்த வந்தனர். மேலும் சோனிகா யாதவுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.