மோந்தா புயல் எதிரொலி... 65 ரயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி!
Dinamaalai October 28, 2025 10:48 PM

வங்கக்கடலில் மோந்தா புயல் மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப்  புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அம்மாநிலத்தில் 65 ரயில்கள் ரத்து  செய்யப்பட்டு இருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.  பயணிகள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என மொத்தம் 65 ரெயில்கள் நாளை வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வானிலை சீரானதும் நிலைமையை  பொறுத்து அதன் பிறகு வழக்கம்ப் போல்  ரயில் சேவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மோந்தா புயல்  காரணமாக இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களும் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் பயணிகள் மிகக் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.