Tamilnadu CM MK Stalin: 2026 தேர்தலில் பாஜக கனவு பலிக்காது.. மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!
TV9 Tamil News October 29, 2025 07:48 AM

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (Tamilnadu CM MK Stalin) என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்தில் பேசினார். அதில்,2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் (2026 Assembly Elections) குறித்தும், பாஜக குறித்தும் பேசினார். மேலும், அந்த கூட்டத்தில் 7வது முறையும் திமுக ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே இருக்கிறது என்பதை நிருபீக்க வேண்டும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்கவேண்டும் என்றார்.

முதலமைச்சர் பேசியது என்ன..?

🌄 களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது…

🌄 இன்று நாம் வகுத்த திட்டத்தையும், நிர்ணயித்துள்ள இலக்கையும், எனது message-ஐயும் தமிழ்நாடெங்கும் உள்ள நமது கட்சியினரிடம் சென்று சொல்லுங்கள்.

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என… pic.twitter.com/eHhJCKHjV9

— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin)


மாமல்லபுரத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த 2021 தேர்தல் என்பது தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்தில் இருந்து மீட்ட தேர்தல் ஆகும். வருகின்ற 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக – அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல் ஆகும். 5 ஆண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.

ALSO READ: ராகுல் காந்தியை மட்டுமே ‘சகோதரர்’ என்று அழைப்பேன்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற போகிறோம். திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது என்பதுதான் அன்றைய நியூஸ் ஹெட்லைன் ஆக இருக்க போகிறது. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. இந்த ஆட்சியின் சாதனைகளை மேல் தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில்தான் சொல்கிறேன். என்னுடைய வாக்குச்சாவடியில் திமுக கூட்டணியை வெற்றிபெற செய்வோம் என்று ஒவ்வொரு கழக உடன்பிறப்புகளும் உறுதியேற்று களப்பணியாற்றினால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று 2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். 2026ல் நடக்கவிருக்கும் ஜனநாயக தேர்தல் தமிழ்நாட்டை நிர்ணயிக்கப்போகும் தேர்தல்.

தனித்தன்மையோடு தலை நிமிர்வோடு நிற்கின்ற நமது ஆட்சியா அல்லது டெல்லி வளைந்து கொடுக்கின்றன அடிமை ஆட்சியா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல். தமிழ்நாட்டின் சுயமரியாதையும், தனித்தன்மையையும் தீர்மானிக்கின்ற தேர்தல். தமிழ்நாட்டிற்கு எல்லா வகைகளிலும் அநீதி இழைக்கப்படுகின்றன. இந்தியின் பெயரால், சமஸ்கிருதத்தின் பெயரால், ஜிஎஸ்டி பெயரால், புதிய கல்வி கொள்கை பெயரால், நீ தேர்வால், சட்டங்களால், உத்தரவுகளால், ஆளுநரால் என தொல்லை மேல் தொல்லை கொடுக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இந்த தாக்குதல்களை முறியடிக்கின்ற வல்லமை நமக்குதான் உள்ளது.

ALSO READ:நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை

பாஜகவின் பகல் கனவு பலிக்காது. திமுக இந்த மண்ணில் இருக்கும்வரை பாஜகவின் கனவு நிச்சயம் நிறைவேறாது. இது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும், புதிது புதிதாக வழியில் திட்டமிடுகிறார்கள்.அடுத்ததாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியையும் மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் நாம் பணியமாட்டோம். 2026 தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்.” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.