சோகம்..! மீண்டும் ஒரு பேருந்து விபத்து..! 2 பேர் பலி.. 12 பேர் காயம்..!
Newstm Tamil October 29, 2025 10:48 AM

ஜெய்ப்பூரை நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் பயணித்தது. அந்த பஸ்சில் 15க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பஸ்சின் மேல்தளத்தில் அதிக அளவில் பயணப் பொதிகள் வைக்கப்பட்டிருந்தன. பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக தொங்கியிருந்த மின்கம்பி திடீரென அறுந்து பஸ்சின் மீது விழுந்தது. உடனே பஸ் முழுவதும் தீப்பற்றியது.

தீ வேகமாக பரவியதால் பயணிகள் பெரும் பரபரப்புடன் கீழே இறங்க முயன்றனர். எனினும், அந்த நேரத்தில் இருவர் தீயில் சிக்கி உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் தீக்காயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பஸ்சின் மேற்கூரையில் இருந்த எரிபொருள் பாட்டில்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர் காரணமாக தீ வேகமாக பரவியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.