கேரளாவில் போலீஸ் தேர்வுக்காக தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் தளிகுளம் குருட்டிபரம்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் ஆதித்யா (22) பட்டதாரியானவர். சமீபத்தில் போலீஸ் துறையில் வேலை பெற விண்ணப்பித்திருந்தார். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், உடல் தகுதி தேர்வுக்காக தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

தினமும் காலை தனது தோழிகளுடன் தளிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஓட்டப் பயிற்சி செய்து வரும் ஆதித்யா, நேற்று காலை வழக்கம் போல் மைதானத்துக்குச் சென்றார். அப்போது தந்தை சுரேஷும் அவருடன் ஆட்டோவில் வந்தார். சில நிமிடங்கள் ஓட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி மைதானத்திலேயே விழுந்தார்.
அதனை கண்டு தோழிகளும் தந்தையும் அதிர்ச்சியடைந்து, உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிதாபமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

போலீஸ் தேர்வுக்காக உற்சாகமாக தயாராகி வந்த இளம்பெண் திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மரணக்காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?