பீகாரில் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பாட்னாவில் நடைபெற்ற நிகழ்வில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மகாகத்பந்தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், கூட்டணி கட்சி தலைவர் பங்கேற்றனர்.

பீகாரில் ஆட்சி அமைந்ததும் 20 நாட்களில் சட்டம் இயற்றப்படும். பீகாரில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.. இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கள்ளு மீதான தடையை நீக்கும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மருத்துவக் கல்லூரிகள் மற்றும் முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் ரூ. 1,500 ஆக உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். மை பஹின் மன் யோஜனாவின் கீழ் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. அனைத்து ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்களும் நிரந்தர அரசு ஊழியர்களாக மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.