கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகைதந்து உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி, இந்திய துணை ஜனாதிபதி பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன் ஆவார். 2 நாட்கள் இந்தநிலையில் பயணமாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வந்துள்ளார். கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவைக்கு வருகை தந்து உள்ளார்.
இந்நிலையில், கோவை விமான நிலையம் வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் தொழிலதிபர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப்பின் கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . பின்னர் பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். துணை ஜனாதிபதி வருகையொட்டி கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.