மோன்தா புயல் பாதிப்பு - நிலவரத்தை காட்டும் 11 புகைப்படங்கள்
BBC Tamil October 29, 2025 11:48 PM
BBC மோன்தா புயலின் தீவிரத்தால் காக்கிநாடா அருகே கடற்கரைப் பகுதியில் கரை அரிக்கப்பட்டது, கடற்கரை அருகில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்தன.

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மோன்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Getty Images நெல்லூரில் பல சாலைகள் மழைநீரால் வெள்ளத்தில் மூழ்கின facebook.com/andhrapradeshweatherman2 திருப்பதியில் பெய்த கனமழையால் பக்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர் x.com/IPR_AP ஆந்திராவில் புயலால் அந்தர்வேதி, பல்லேபாலம், காசுடாசுபாலம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் பிற பொருட்களை மீட்பு படையினர் அகற்றினர் UGC ஆந்திராவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது UGC அரக்கு என்கிற ஊரில் போரா மற்றும் சிமிடிபள்ளி இடையேயான 100 மீட்டர் நீள ரயில் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. BBC உப்படா என்கிற ஊரில் பெரிய அலைகள் தாக்கிய பிறகு சாலையில் கற்கள் நிறைந்து காணப்படுகிறது. BBC விசாகப்பட்டினத்தில் உள்ள யாரடாவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன Getty Images காற்றினால் சென்னை கடற்கரையில் பெரிய அலைகள் உருவாகின AFP via Getty Images புயல் கரையைக் கடந்த பிறகு, சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இளைஞர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டதைக் காண முடிந்தது. Subrat Kumar Pati ஒடிசாவில் சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்த மரங்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அகற்றினர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.