கடந்த ஜூலை -ஆம் தேதி, நெல்லை கே.டி.சி. நகரில் ஐ.டி ஊழியர் கவின் காதல் விவகாரத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இளைஞர் சுர்ஜித், அவரது தந்தையான எஸ்.ஐ. சரவணன், உறவினர் ஜெயபாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 32 ஆவணங்கள் மற்றும் 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது.
நெல்லை கவின் கொலை வழக்கில் ஜாமின் கோரி எஸ்.எஸ்.ஐ. சரவணன் 03-வது முறையாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், 03-வது முறையாக ஜாமீன் கோரி சரவணன் மனுதாக்கல் செய்தார். ஏற்கனவே 2 முறை எஸ்எஸ்ஐ சரவணன் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.