“மின்சார பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைத்தது ஏன்?”- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
Top Tamil News October 30, 2025 02:48 PM

பூந்தமல்லியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை தற்போது மின்சார பேருந்து பணிமனையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு மின்சார பேருந்துகளுக்கு சார்ஜ் அமைக்கும் மின்சார பெட்டிகள் அமைப்பது மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் டிரைவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், “முதல் கட்டமாக வியாசர்பாடியில் மின்சாரப் பேருந்துக்கான பணிமனையாக மாற்றப்பட்டு 120 பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையாக மாற்றப்பட்டது.  தற்போது பூந்தமல்லியில் அரசு பணிமனையில் மின்சார பேருந்து நிறுத்த பணி மனையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு 130 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் மாசு தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழகத்திலும் அந்த நடவடிக்கை என்ற அடிப்படையில் உலக வங்கி பரிந்துரையின் அடிப்படையில் மின்சார பேருந்துகள் துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்சார பேருந்துகள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் மூன்று பணிமனைகள் முதற்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் பூந்தமல்லி பனிமனை பயன்பாட்டிற்கு வரும். மின்சார பேருந்துகள் டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.


உலக அளவில் உள்ள நடைமுறை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த நடைமுறை உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்துகள் இயக்குவது டீசல் பேருந்துகள் வாங்கும் விலையை விட நான்கு மடங்கு அதிக விலை கொண்டது. மின்சார பேருந்து வாங்கும்போது அதனை பராமரிப்பதற்கான பணியாளர்கள் நம்மிடம் இல்லை. பராமரிப்பதில் சிறு தவறு நடந்தாலும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் தான் ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்து தயாரிக்கின்ற நிறுவனத்தின் சார்பாக பேருந்துகளை பராமரித்து இயக்குகிறார்கள். இதனால் அரசுக்கு பெரும் சுமையை குறைக்கும் நடவடிக்கையாக உள்ளது. கால சூழலுக்கு ஏற்ப எதிர்காலத்தில் நடவடிக்கை மாற்றப்படும். தற்போது 3500 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுப்பதற்கு நேர்காணல் நடைபெற்று உள்ளது. மின்சார பேருந்துகள் வந்ததால் டீசல் பேருந்துகள் குறைக்கப்படாது. புதிதாக 11 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு முதல்வர் அறிவித்தார். தற்போது 5 ஆயிரம் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது, மீதமுள்ள பேருந்துகள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் பேச்சு வார்த்தை முடிக்கப்படாமல் இருந்தது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று வாரத்தில் முடிய வேண்டிய பேச்சுவார்த்தையை ஐந்து ஆண்டுகள் பேசி முடிக்காமல் இழுத்து அடித்து இடைக்கால நிவாரணத்தை அறிவித்து விட்டு சென்று விட்டார்கள். அந்த பேச்சு வார்த்தையும் திமுக அரசு தான் முடிவுற்றது. தமிழக அரசு வரலாற்றில் ஒரு ஆட்சி காலத்தில் இரண்டு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை முடித்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் தான்” என தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.