நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், விடுதி உணவை உண்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால், கல்லூரிக்கு திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அந்த கல்லூரிக்கு சொந்தமான விடுதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். சமீப நாட்களாக விடுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருந்ததாகவும், அதனுடன் சேர்ந்து வழங்கப்பட்ட உணவை உண்ட சில மாணவர்களுக்கு தோல் வீக்கம், வாந்தி, உடல் எரிச்சல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதியை நேரில் ஆய்வு செய்து, உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், விடுதியின் சுகாதார நிலைமை பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நிலையமைப்பை சமாளிக்கும் நோக்கில், கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவித்தது. இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.

அதே நேரத்தில் நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் தற்காலிகமாக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?