திருப்பூரில் அதிர்ச்சி... செல்போனில் வேறொருவருடன் பேசியதால் இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொன்ற கள்ளக்காதலன்!
Dinamaalai October 30, 2025 02:48 PM

திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதற்காக ஆத்திரமடைந்த லாரி கிளீனர், தனது கள்ளக்காதலியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (40), தனியார் கழிவு நீர் அகற்றும் லாரியில் கிளீனராகப் பணியாற்றி வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி, குழந்தைகளை விட்டு தனியாக வசித்து வந்த அவர், திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு தங்கியிருந்த மாது (35) என்ற பெண்ணுடன் பழகி வந்தார். இவர்களது நட்பு, பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

மாதுவை தன் வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்று உல்லாசமாக இருந்த இளங்கோவன், மாது செல்போனில் அடிக்கடி வேறு ஒருவருடன் நீண்ட நேரம் பேசுவதை கவனித்தார். இதனால் சந்தேகம் கொண்ட அவர், கடந்த 26ம் தேதி இரவு மாதுவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். தகராறு உச்சம் எட்டிய நிலையில், ஆத்திரமடைந்த இளங்கோவன் வீட்டில் இருந்த குழவிக்கல்லை எடுத்து மாதுவின் முகத்தில் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மாது ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்த நிலையில், இளங்கோவன் அங்கிருந்து வெளியேறியதாகவும், மறுநாள் வந்து பார்த்த போது மாது உயிரிழந்திருந்ததாகவும் தெரிய வந்தது.

இளங்கோவன் உடனடியாக மாதுவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில், வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மாதுவை ஆத்திரத்தில் தாக்கி கொன்றதை இளங்கோவன் ஒப்புக் கொண்டார். போலீசார் கொலைவழக்குப் பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.