இஞ்சியை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News October 30, 2025 11:48 AM

பொதுவாக இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது .இதை தொடந்து எடுத்து கொண்டால் நம் உடலில் வாயு ,பித்தம் ,கபம் இம்மூன்றும் கட்டுக்குள் இருக்கும் ,எனவே இஞ்சியை எப்படி சேர்த்து கொண்டால் நாம் மருத்துவ பலன்களை அடையலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.இஞ்சியை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால், வாய்வுத் தொல்லை நீங்கும்.
2.இஞ்சியை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் குமட்டல், வாந்தியை தடுக்கும். 
3.மேலும், காலையில் இஞ்சி டீயை எடுத்துக் கொண்டால் உடல் எடை கணிசமாக குறையும். 
4.இஞ்சியை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் செரிமான மண்டலமும் சுத்தமாகும்.
5. இந்த வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து குணமடைய எப்படி சுவையாக இஞ்சி சட்னி செய்யலாம் என்று பார்ப்போம் -
6.முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விடவும் .பின்னர் , நறுக்கிய இஞ்சியை அதில் போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
7.பின்னர்,அதே வாணலியில்  வெங்காயத்தை போட்டு வதக்கி,எடுத்து கொள்வோம்  
8.பின்னர் அதனுடன்  தேங்காய் துருவல், கொத்தமல்லியை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
9.இப்படி வதக்கிய அனைத்து கலவையை நன்றாக ஆற வைத்து, அதை மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
10.பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி,எடுத்து கொள்வோம் .பின்னர்  அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுத்து கொள்வோம் , 
11.இப்போது தாளித்த பொருட்களை இஞ்சி கலவையில் கலந்து பரிமாறினால் சுவையான,மற்றும் ஆரோக்கியமான  இஞ்சி சட்னி ரெடி.   

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.