தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,000 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை நேற்று காலை ஏற்பட்ட பெரும் சரிவைத் தொடர்ந்து, மாலையிலும் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாகக் குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த ஆபரணப் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,000-க்கு மேல் குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.90,600க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.11,325 ஆக உயர்ந்துள்ளது. காலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.920 அதிகரித்துள்ளது.