தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர தி.மு.க. புதிய அலுவலகத்தில் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர தி.மு.க. புதிய அலுவலகம் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் முன்பகுதியில் 8 அடி உயர பீடத்தின் மீது மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. மேலும், அங்கு கலைஞர் அறிவகம் என்ற பெயரில் நூலகமும் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி நகர தி.மு.க. புதிய அலுவலக திறப்பு விழா நேற்று இரவில் நடைபெற்றது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வந்தார். விழாவில் பங்கேற்று கோவில்பட்டி நகர தி.மு.க. புதிய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிலையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நகர தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர், கலைஞர் அறிவகம் நூலகத்துக்கு சென்று பார்வையிட்டார். நூலக வருகை பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் செண்டைமேளம் முழங்கவும், வாணவேடிக்கை நிகழ்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவருக்கு கனிமொழி எம்.பி. பொன்னாடை வழங்கியும், அமைச்சர் கீதாஜீவன் வெள்ளி செங்கோல் பரிசு வழங்கியும், நகராட்சி தலைவரும், மேற்கு நகர செயலாளருமான கருணாநிதி வெள்ளிமயில் படம் நினைவு பரிசாக வழங்கியும் வரவேற்றனர்.முன்னதாக கோவில்பட்டி நகர தி.மு.க. அலுவலகம் கட்டிய என்ஜினீயர் ராமச்சந்திரன், அலுவலகம் கட்டுவதற்கு நிலம் வழங்கிய கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உறுப்பினர் கே.ஆர்.ஏ.நிதிஷ்ராம் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!