வில்லியனூர் தொகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆய்வு செய்தார்!
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட காவேரி நகர், பாண்டியன் நகர், விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கொம்பாக்கம் செட்டிக்களம், உத்திரவாகினிப்பேட் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் வில்லியினூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் ஊழியர்களை உடன் அழைத்துச் சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மழைநீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் வைத்து இறைக்கவும், மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட வாய்க்கால்களை தூர்வாரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு இளநிலைப் பொறியாளர் திருவேங்கடம், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.