“இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டோம்” ... ரேபிடோ டிரைவரின் வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்!
Dinamaalai October 29, 2025 01:48 PM

மதுரவாயிலில் வசிக்கும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக ரேபிடோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், “இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொண்டோம்” என குற்றம்சாட்டப்பட்ட டிரைவர் வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவைச் சேர்ந்த தாசு அகதார் (21) என்ற இளம்பெண் பள்ளிக்கரணையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல ரேபிடோவில் சவாரி புக் செய்தார். அதற்கு சிவகுமார் (22) என்ற டிரைவர் வந்தார். அவர் தாசுவை பள்ளிக்கரணைக்கு அழைத்துச் சென்றபின், மீண்டும் மதுரவாயிலுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதால் காத்திருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

வழியில் போரூர் சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்திய சிவகுமார், இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனே அதிர்ச்சியடைந்த தாசு அகதார், தனது கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதன்படி, கணவர் தாசுவிடம் “அவரை நைசாக பேசிக் கொண்டு வீட்டருகே அழைத்துவா” என அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர், மதுரவாயிலுக்கு வந்த போது காத்திருந்த தாசுவின் கணவர் மற்றும் உறவினர்கள் சிவகுமாரை பிடித்து தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை காப்பாற்றி கைது செய்தனர். வானகரம் போலீசார் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், விசாரணையின் போது “நாங்கள் இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டோம், யாரையும் நான் வலுக்கட்டாயப்படுத்தவில்லை” என சிவகுமார் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.