காதலி சாலை விபத்தில் உயிரிழந்த துயரத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருகே பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் நரேன் கார்த்திக் (20), கோவை நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவராக படித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு அவரது தாய் ராஜகுமாரி மரணமடைந்திருந்தார்.

இதற்கிடையில், நரேன் கார்த்திக் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் கடந்த 21ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
காதலி மரணம் குறித்த செய்தியை அறிந்த நரேன் கார்த்திக் கடும் மனவேதனையில் ஆழ்ந்தார். பின்னர் கோவையிலிருந்து ஊருக்குத் திரும்பிய அவர், துக்கத்தில் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

அதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை உடனே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வி மற்றும் துக்கம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட இந்த இளைஞரின் மரணம், அந்தப் பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?