தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. இந்த மொழிகளை தொடர்ந்து இவர் மலையாள சினிமாவிலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில், இந்த மொழிகளிலும் வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இவர் நடிகர் சிவகுமாரின் (Sivakumar) மகன் என்றாலும் தனது நடிப்பின் மூலம் முன்னேறிய நாயகனாவார். தனது தந்தையின் எந்தவித ஆதரவும் இல்லாமல் சினிமாவில் தானே முன்னேறி பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் முதல் படமாக அமைந்தது நேருக்கு நேர் (Nerukku Ner).
இதில் தளபதி விஜயுடன் (Thalapathy Vijay) இணைந்தது நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 44 படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் புது படங்களிலும் சூர்யா நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்பு ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவிற்கு (Jyothika) பிறகு, தனக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார் .
இதையும் படிங்க: ட்ரெயின் படத்தில் 2 காட்சிகளுக்காக ரூ 7.5 லட்சம் செலவு பண்ணிருக்கேன்- மிஷ்கின் உடைத்த உண்மை!
ஜோதிகாவிற்கு பின் தனக்கு பிடித்த நடிகை பற்றி சூர்யா பேசிய விஷயம் :முன்பு பேசிய நேர்காணலில் தொகுப்பாளர் சூர்யாவிடம், உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித நடிகர் சூர்யா, “எனக்கு ஜோ தான் மிகவும் பிடிக்கும், அது எல்லாருக்கும் தெரிந்ததே. அவர் மிகவும் திறமையான நடிகை, நன்றாக நடிப்பார், நன்றாக நடனமாடுவார். மேலும் திரையில் அவரின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். மேக்கப்பிற்கு முன்னும் மற்றும் பின்னும் அவரின் நடிப்பும் மிகவும் இயற்கையாக இருக்கும்.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் காஸ்மோரா படம் – கொண்டாடும் படக்குழு
அவருக்கு பிறகு கூறவேண்டும் என்றாலே நடிகை அசின்தான் (Asin). அவர் மிகவும் திறமையானவர், பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். அவர் ஆமிர்கான் சார் உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் கஜினி திரைப்படத்தில் இவர் நடித்தவிதமும் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் அவரின் நடிப்பில் எந்தவித குறையும் சொல்லமுடியாதது” என நடிகர் சூர்யா அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.
கருப்பு படம் குறித்து சூர்யா வெளியிட்ட பதிவு :.#GodMode 🙏🏻https://t.co/Nn3tpFCVOK@SaiAbhyankkar @RJ_Balaji @trishtrashers@VishnuEdavan1 @shobimaster@dop_gkvishnu@thinkmusicindia @DreamWarriorpic #Karuppu #கருப்பு #కరుప్పు #കറുപ്പ് #ಕರುಪ್ಪು pic.twitter.com/MoxRVTrLb7
— Suriya Sivakumar (@Suriya_offl)
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம் கருப்பு. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி இயக்க, திரிஷா முன்னணி நாயாகியாக நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன், தெய்வீகம் மற்றும் நீதி தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.