
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 22 வயதான பட்டதாரி பெண் ஆதித்யா, காவலர் பணிக்காக விண்ணப்பித்திருந்தார். இதற்காக, அவர் உடல் தகுதி தேர்வுக்கு தீவிரமாக தயாராகி, தினமும் மைதானத்திற்கு சென்று ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று அவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அவருடன் இருந்த அவரது தந்தை உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு, ஆதித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவலர் கனவோடு பயிற்சி செய்து வந்த இளம் பெண், மைதானத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva