சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் ஓய்வெடுக்க முடிவு... ரசிகர்கள் அதிர்ச்சி!
Dinamaalai October 29, 2025 01:48 PM

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த *‘கூலி’* படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் வெற்றி கண்டது. இதனைத் தொடர்ந்து ரஜினி – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருவரும் இதைத் தாமே உறுதிப்படுத்தினர்.

இந்தக் கூட்டணிப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளார். படத்தின் கதைக்காக நெல்சன் தற்போது பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு 2027ம் ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை கமல்ஹாசனே தயாரிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இந்தப் படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படம் எனும் தகவல் திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக சினிமாவில் தன்னைச் செழுமைப்படுத்திய ரஜினிகாந்த், இந்தப் படத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வரும் ரஜினி, இயக்குநர் சுந்தர் சி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளதாகவும், அதையும் கமல்ஹாசனே தயாரிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் இந்த கடைசி படம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.