ஒரே நாளில் 2 வது முறையாக உயர்ந்த தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
Dinamaalai October 30, 2025 12:48 AM

கடந்த சில வாரங்களாக உச்சத்தை தொட்ட தங்க விலை, தீபாவளிக்குப் பிறகு தொடர்ந்து சரிவை கண்டது. ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் இருந்த தங்கம், கடந்த 18-ஆம் தேதி முதல் விலை குறைந்து வந்தது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்த நிலையில், இன்று தங்கம் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய காலை விலையில் கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,210-க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.89,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1, கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, கிராமுக்கு ரூ.166 மற்றும் கிலோவுக்கு ரூ.1,66,000 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும், இன்று மாலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. இதன்படி கிராமுக்கு ரூ.115 மற்றும் சவரனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.11,325-க்கும், ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி நிலைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.