ஜெயிலர் 2 படத்தின் மூலம் காமெடியில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்
TV9 Tamil News October 30, 2025 03:48 AM

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 70 வயதைக் கடந்தும் ஒரு நடிகர் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தொடர்ந்து முன்னதாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஜெயிலர். ஆக்‌ஷன் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படம் வசூலிலும் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அதன்படி படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தில் காமெடியனாக நடிக்கும் சந்தானம்:

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து நாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் காமெடியனாக சந்தானத்தின் நடிப்பை மிஸ் செய்து வந்தனர் அவரது ரசிகர்கள். இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… ரசிகர்களால் தியேட்டர் போறதையே நிறுத்திட்டேன் – செல்வராகவன் ஓபன் டாக்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Buzz – #Santhanam to give Re-entry as Comedian in #Jailer2. His portions are expected to shoot Next month😲🔥

Santhanam has previously collaborated with superstar #Rajinikanth in Lingaa🤝 pic.twitter.com/CriImDgov0

— AmuthaBharathi (@CinemaWithAB)

Also Read… விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.