பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகள் ரஞ்சிதா (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரினார். சமீபத்தில் அவரது தோழி ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவுக்கு ரஞ்சிதா தனது தோழி ரேகாவுடன் சென்றிருந்தார். இருவரும் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.

அன்று காலை ரேகா முதலில் குளித்து முடித்து வெளியே வந்தார். பின்னர் ரஞ்சிதா குளிக்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் ரேகா கதவை தட்டியபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. உடனே அவர் விடுதி ஊழியர்களையும், மூடிகெரே போலீசாரையும் தொடர்பு கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரஞ்சிதா உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

போலீசார் ரேகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குளியல் அறையில் இருந்த தண்ணீர் சூடேற்றும் கருவியில் கியாஸ் கசிவு ஏற்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். ஆனால் ரஞ்சிதாவின் மரணம் குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து மர்ம மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவம் நடந்த விடுதி உரிய அனுமதி இன்றி செயல்பட்டதும், வரி பாக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மூடிகெரே பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?