தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் திமுகவால் துன்புறுத்தப்படுவதாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இண்டியா கூட்டணி வெற்றியை நோக்கி செல்வதால் பிரதமரால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம். புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது மோடிக்கு கைவந்த கலை. பிளவுப்படுத்தும் அரசியலை மோடி செய்கிறார். பீகாரில் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடுகிறார். ஒடிசாவை தமிழ்நாட்டுக்காரர் ஆள்வதா? என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டிய பிரதமர் மோடி தனது பொறுப்பை மறந்து பேசுகிறார். பீகார், ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்டிற்கான நிதி, கல்விக்கான நிதி என மாநிலத்திற்கான எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை.” என்றார்.