நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. குறிப்பாக, சமையல் சிலிண்டர்களின் விலை மாதத்தின் முதல் தேதியில் மேம்படுத்தப்படுவது வழக்கமாகும்.
இந்நிலையில், இன்று (நவ.1) எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50 என்ற நிலை தொடர்கிறது.