தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.