தமிழ்நாட்டில் தற்போதைய வாக்காளர் பட்டியல் Freeze செய்யப்படும்: தேர்தல் ஆணையம்..!
WEBDUNIA TAMIL October 29, 2025 06:48 AM

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தற்போதைய வாக்காளர் பட்டியல் ஃப்ரீஸ் (Freeze) செய்யப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் உறுதிப்பட கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 1951 முதல் 2004 வரை இதுவரை எட்டு முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டது. இடம்பெயர்வு, இரட்டை பதிவு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் சீர்திருத்தம் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போதைய வாக்காளர் பட்டியல் முடக்கம் செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருத்த பணிகள் நிறைவடைந்து 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.