“கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?”- காரணத்தை உடைத்த சீமான்
Top Tamil News October 29, 2025 07:48 AM

பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப் போகிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன் என  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய  சொந்தங்களுடன் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடினார். அதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது, “மக்கள் கேள்விகளை கேட்கும் பொழுது பதில் இருப்பவர்கள் தான் மக்களை சந்திக்க முடியும். நாங்கள் மக்களின் குறைகளை தீர்க்க வந்ததால் இது போன்ற கூட்டங்களை நடத்துகிறோம். எங்களின் உறவுகளாக அனைவருமே இருப்பதால் நாங்கள் துணிந்து மக்களின் பிரச்சினைகளை கேட்கிறோம். எந்த ஒரு கருத்துக்களையும் முன் வைக்கும் போது மக்கள் ஏற்பார்கள் ஏற்க மாட்டார்கள், அருவருப்பார்கள். எடுத்துக்கொண்டு கருத்தை முன் வைக்க முடியாது. மனிதன் இல்லாமல் மரம் வாழ்ந்து விடும். மரம் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது. இதையெல்லாம் கற்றுக் கொடுக்காமல் என் மக்கள் எனக்கு ஓட்டு போட்டு என்ன செய்யப் போகிறார்கள். மரம் என்னுடைய உயிர். மரக்கன்றுகள் நடவு செய்தால் நான் மதிப்பெண் வழங்குவேன் என்று சொன்னதும் சிரித்தார்கள்.


வருகின்ற 15ஆம் தேதி தண்ணீர் மாநாடு நடத்த இருக்கிறோம். அது உங்களிடம் பேசும், சமூக குற்றத்தை அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக அரசு மாற்றி உள்ளது. இயற்கை வளங்களை விற்று கொண்டிருந்தால் நாடு பாலைவனமாக மாறிவிடும்.மலையை அறுத்த உடனே என் தாயின் மாரை அறுப்பது போல எனக்கு இருக்கிறது.எனக்கு தூக்கம் வரவில்லை. நடிகர்களை நேசிப்பவர்கள் என் ஆளில்லை. நாட்டை நேசிப்பவர்கள் என்னுடைய ஆட்கள். வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாக்குரிமை கொடுக்க மாட்டோம்.அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் மொத்தத்தையும் பாஜக காரர்கள் இழுத்து விடுவார்கள்.அவர்கள் அனைவரும் மொழியால் ஒன்றிணைந்து விடுவார்கள். பிறகு நம்மையே விரட்ட ஆரம்பித்து விடுவார்கள்.தமிழகத்தில் 150 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறேன்.திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன். கரூர் விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் விஜய் பெயர் இல்லை?. ஆதவ் அர்ஜுனா பெயர் இல்லை?. குற்றம் யாரால் நடந்தது? முதன்மை யார். காரணமானவரையே விசாரிக்கவில்லை என்றால் விசாரணை எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்கள் விஜயை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்துகிறார்கள்.கடைசியாக கரூர் வழக்கின் விசாரணையை பார்ப்பீர்கள். விஜய் பெயரை வழக்கில் சேர்க்காமல் இருப்பது கூட்டணிக்காகத்தான். தம்பி விஜய் கரூருக்கு வந்ததால் தானே கூட்டம். அப்போது அந்த கூட்டத்திற்கு அவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா?இல்லையா? மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் எந்த கொம்பாதி கொம்பணையும் வீழ்த்துவார்கள். எத்தனை அணிகள் பிரிந்து இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்காது.கச்சத்தீவை மீட்க முடியாமல் கையாலாகாத அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது” என்று கூறினார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.