தெலங்கானா மாநிலம் வரங்கலில் 7 வயது சிறுமி ஒருவரை நாய்கள் கூட்டமாகத் தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூ ஷயம்பேட், ஹன்மகொண்டா பகுதியில் தனியாகச் சென்ற சிறுமி மீது 8–10 நாய்கள் திடீரென பாய்ந்தன. சிறுமி கீழே விழுந்ததும் அந்த நாய்கள் கடித்து இழுத்துச் செல்கிறது. அங்கு சென்ற ஒருவர் தைரியமாக முன்வந்து நாய்களை விரட்டி சிறுமியை மீட்டார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவு செய்யப்பட்டதால், வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“>
இந்த சம்பவம் நகரங்களில் நாய்களின் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பிற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசு மற்றும் மாநகராட்சியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா முழுவதும் இதுபோன்ற நாய்கள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாய்களை கட்டுப்படுத்தும் திட்டங்கள், தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் அவசியமாகியுள்ளன.