நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு தென்கிழக்கே 780 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளது. தாழ்வு மண்டலம் ஒரே பகுதியில் மையம் கொண்டுள்ள நிலையில், அது நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.