அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது விஜய்க்கு பாதுகாப்பாகவும், அரசியல் ரீதியாக நன்மையுடனும் இருக்கும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “விஜய் தனது எதிர்காலத்தை உறுதிப்படுத்த விரும்பினால் அதிமுகவுடன் கைகோர்ப்பது சிறந்த முடிவு. அந்த கூட்டணி அவருக்கு பாதுகாப்பையும், அரசியல் நிலைப்பாடையும் அளிக்கும்,” என்றார்.
மேலும், “கரூருக்கு விஜய் மீண்டும் செல்லவில்லை என்பது சாதாரண காரணமல்ல. அங்கு சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவருக்கு தகவல் வந்திருக்கலாம். அதனால் தான் விஜய் அவ்விடத்துக்கு செல்லத் தயங்குகிறார்,” எனக் கூறினார்.
விஜய் தற்போது 41 குடும்பங்களுடன் நேரடியாக சந்தித்து உரையாட முன்வந்துள்ளார் என்றும், அது மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் நல்ல முயற்சி எனவும் ராஜேந்திர பாலாஜி பாராட்டினார்.
அதே நேரத்தில், “விஜயின் மாஸ் இமேஜ் அரசியல் ஓட்டாக மாறுவதற்கு சரியான வழிகாட்டல் தேவை. அவருக்கு தகுதியான பயிற்சியாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தேவைப்படும்,” என்றும் குறிப்பிட்டார்.
“அதிமுகவுடன் இணைந்தால் விஜய்க்கு நிச்சயமாக நன்மை கிடைக்கும். ஆனால் அவர் வராவிட்டாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் அவரை அழைக்கவில்லை, ஆனால் வர விரும்பினால் நிச்சயமாக வரவேற்போம்,” என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.