AK64: அஜித் கொடுக்கப்போகும் செம சர்ப்பரைஸ்!.. ஃபேன்ஸ் பி ரெடி!.. புதுப்பட அப்டேட்!..
CineReporters Tamil October 28, 2025 11:48 AM

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அந்த படம் நல்ல வசூலையும் பெற்றது. அதேநேரம் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு இப்படம் லாபத்தை கொடுத்தாலும் தயாரிப்பாளர்களுக்கு 50 கோடி வரை நஷ்டம் என செய்திகள் வெளியானது..

ஒருபக்கம் இந்த திரைப்படத்தில் அனுமதியின்றி தனது மூன்று பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிராக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் குட் பேட் அக்லி ஓடிடியிலிருந்து தூக்கப்பட்டது. அதனாலும் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து தங்களுக்கு இன்னொரு படம் நடித்து கொடுத்தால் நஷ்டத்தை ஈடுகட்டி விடுவோம் என குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித்தை அணுகியதாகவும் ஆனால் அஜித் ‘பார்க்கலாம்’ என்று சொல்லி நழுவி விட்டதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஒருபக்கம் அஜித் அடுத்த நடிக்கவுள்ள படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தை பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிக்கவிருக்கிறார். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். எனவே அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் கொண்டாட்டம்தான்.

அஜித் கார் ரேஸை முடித்துவிட்டு ஃப்ரி ஆகிவிட்டார். சமீபத்தில் அவரின் கேரளா சென்று அவரின் குல தெய்வ கோவிலும் குடும்பத்துடன் வழிபட்டார். மேலும், திருப்பூரில் உள்ள ஒரு ரைபில் கிளப்பில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில்தான் அவரின் புது பட அப்டேட் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.