இன்று விஜய் கரூரில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரடியாக சந்திக்கிறார். கடந்த 27 ஆம் தேதி கரூரில் தேர்தல் பிரச்சாரம் விஜய் மேற்கொண்ட போது அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பல பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 30 நாள் ஆகிவிட்டது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கும் அவருடைய கட்சிக்கும் பெரும் நெருக்கடி உருவானது. அதுவும் சோசியல் மீடியாக்களில் பல மீம்ஸ்கள் வைரலானது. விஜய்க்கு எதிராக பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. இவர் அரசியலுக்கு செட்டாவாரா? இவருடைய இந்த அரசியல் சரியா என்றெல்லாம் விவாதங்கள் எழத் தொடங்கியது.
இன்னொரு பக்கம் கரூர் சம்பவம் நடந்து 30 நாள்கள் ஆன நிலையில் இன்றுதான் விஜய் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார். இதுவும் விமர்சனத்திற்கு ஆளானது. ஒரு அரசியல் கட்சி தலைவரின் செயலா இது? என்றெல்லாம் அவருக்கு எதிராக பல கேள்விகள் எழுப்பப்பட்டன. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க விஜய் தரப்பிலிருந்து போலீஸிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அதற்குள் அந்த ப்ளானே மாறிவிட்டது. கரூர் வந்து நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க இருந்த விஜய் சென்னைக்கு வரவழைக்கப்ப்ட்டு ஒரு பெரிய அரங்கில் வைத்து அவர்களை சந்தித்து வருகிறார். இதற்காக நேற்றே கரூரில் பெரிய பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்கள் மாமல்லப்புரத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கு இருந்து ஒரு அரங்கில் அவர்களை விஜய் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விஜய் ஒரு அறையில் இருக்க, ஒவ்வொரு குடும்பமாக சென்றுதான் விஜயை சந்தித்துவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தனித்தனியாக விஜய் ஆறுதல் கூறிவருகிறார். இதற்கிடையில் விஜயின் இந்த செயலை விமர்சித்து ஒரு ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில் ஜன நாயகனுக்கு பதிலாக பிண நாயகன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விஜயை கடுமையாக விமர்சித்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் கரூர் சம்பவம் தொடர்பான இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் தனக்கு எதிராக எந்தவொரு சாட்சியும் மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு சந்திப்பு என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.