விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததை பற்றி வலைப்பேச்சு அந்தணன் சொல்வது என்ன என்பதை இங்கு பார்ப்போம். இன்னும் நூறு வருஷம் ஆனாலும் தீராத ஒரு பெரும் துயரம் என்றால் அது கரூர் துயரம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் அதை தொடர விடக்கூடாது என நினைப்பதுதான் இயல்பு. ஏனெனில் பாதிக்கப்பட்ட குடும்பமே எப்படியாவது அந்த சம்பவத்தை மறக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அப்போ அதற்கு காரணமானவர் அவரு இவரு என கை காட்டாமல் அந்த குடும்பத்தை வரவழைத்து அல்லது நேரில் போய் அவர்களுடன் ஒரு பத்து நிமிடம் நேரத்தை செலவழித்தால் அது அவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதுதான் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது.
விஜய் அங்க போகிறார் அல்லது அவர்கள் இங்கு வருகிறார்கள் என ஒரு பெரிய விவாதமாக மாறி சோசியல் மீடியாக்களில் இன்று வரை அப்படி ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருந்தாலும் பெரிய விஷயமாக இப்போது பார்க்கப்படுவது விஜய் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறியது தான். அப்படி ஒரு சந்திப்பு தான் நேற்று நடந்திருக்கிறது. இது ஒரு நெகிழ்வான தருணமாக இருந்தது என அனைவருமே சொல்கிறார்கள். இன்று பல சேனல்களில் அங்கு போய் வந்தவர்கள் பேட்டிகளில் என்ன நடந்தது என்பதை பற்றி பேசி வருகிறார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் பொழுது மீண்டும் அந்த கரூர் சம்பவத்தை நாம் நினைவுக்கு கொண்டு வருகிறது.
இந்த முறை ஊடகங்கள் யாரையும் விஜய் அனுமதிக்கவில்லை .இந்த 30 நாட்களாக ஊடகங்கள் மூலமாக அவருக்கு ஒரு பெரிய மன உளைச்சலே வந்திருக்கும். அதனால் கூட ஊடகங்களை அனுமதித்திருக்க மாட்டார். விசாரித்த வரைக்கும் புஸ்ஸி ஆனந்த் அங்கு இருந்தார் என சொல்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கும் பொழுது விஜய் மட்டும்தான் அங்கு இருந்திருக்கிறார். அவருடன் தவெக கட்சியைச் சார்ந்த யாருமே இல்லை என்று தான் அனைவரும் கூறுகிறார்கள். ஒவ்வொரு குடும்பங்களையும் விஜய் சந்திக்கும் பொழுது சாஷ்டாங்கமாக அவர்கள் காலில் விழுந்தார் என கூறுகிறார்கள்.
உண்மையிலேயே கண்ணீர் விட்டு அழுதாலும் அவன் நடிகன் தான் என்ற ஒரு பிம்பம். அதை வைத்து தான் வெளியில் பேசுவார்கள். ஆனால் அவர் எந்த அளவுக்கு வேதனையில் இருந்தார் என்பதை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் தெரியும். அதை வெளியில் வந்தும் அவர்கள் கூறியுள்ளனர். ஒரு பெரியவர் பேசும் பொழுது சொன்னார், ‘ ஏதோ கூப்பிடுறாங்க, போறேன்’ என்று தான் அவர் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் விஜய்யை சந்தித்த பிறகு அவரைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது சார். ரொம்ப வேதனையில் இருக்கிறார் என்று அந்த பெரியவர் சொன்னார்.
அங்கு யாரெல்லாம் வந்தார் என்று பார்க்கும் பொழுது 38 குடும்பங்கள் தான் வந்திருக்கின்றனர். ஒரு குடும்பம் வரவே இல்லை .வந்த அனைத்து குடும்பங்களுக்கும் இன்சூரன்ஸ் போட்டு தந்தார் என்று சொல்கிறார்கள். மெடிக்கல் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் எல்லாமே போட்டு கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதில் ஒரு பெண் விஜய் கொடுத்த இருபது லட்சம் ரூபாயை அப்படியே அவருடைய கணக்கிற்கு திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் விஜய் நேரில் வரவில்லை. அவர் நேரில் வரவேண்டும் என்று சொல்லி அந்தப் பெண் திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய தங்கையை மட்டும் அவருக்கு பதிலாக கன்வின்ஸ் செய்து சென்னைக்கு அழைத்து சென்று விட்டனர். எனக்கு அதில் சம்மதம் இல்லை என்ற அந்த பெண் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இது ஒரு அதிர்ச்சிக்குரிய விஷயம்தான். இந்த ஆறுதல் விஜய் நேரில் வந்து சொல்ல வேண்டும் என அவர்கள் விரும்பி இருக்கிறார்கள் .இன்னொரு விஷயம் என்னவெனில் விஜய் தரப்பிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தையும் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தான் அவர் நினைத்திருக்கிறார். நேரில் வந்து ஒவ்வொரு குடும்பமாக சென்று ஆறுதல் கூற வேண்டும் என சொல்லியிருக்கிறார். அதற்கு தான் அனுமதியும் கேட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக கரூரில் மட்டுமில்லை. ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக அதாவது திருச்சியில் இருந்து மேட்டூர் வரைக்கும் ஐந்து மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருப்பதனால் தனித்தனியாக பார்க்க விஜயை மட்டும் இரண்டு நாட்கள் பாலோ பண்ண வேண்டும்.
அதற்கு பதிலாக ஒரு மாற்று ஏற்பாடு செய்யலாம் என்று போலீஸ் தரப்பிலிருந்து கூறி இருக்கிறார்கள். அதற்காக கரூரில் மண்டபம் கேட்டிருக்கிறார்கள். மண்டபம் கொடுக்கவில்லை .நாமக்கல்லில் ஒரு மண்டபம் கொடுத்திருக்கிறார்கள். அது அதிமுகவை சேர்ந்த ஒரு நிர்வாகியின் மண்டபம். அதை விஜய் வேண்டாம் என சொல்லி இருக்கிறார். ஏனெனில் ஏற்கனவே அதிமுகவிற்கும் தவெகவிற்கும் கூட்டணி நடக்கப் போகிறது என்ற ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதனால் அது வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். எது எப்படியோ பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து விஜய் பேசி விட்டார். இனிமேல் அவருடைய அரசியல் நகர்வு இன்னும் வேகம் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மாதமாக பேசாமல் இருந்த விஜய் மீண்டும் கட்டாயமாக பேசுவார்.
நீதிமன்றம் இனிமேல் இந்த பிரச்சாரத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க போகிறது. அரசிடம் இருந்து அதற்கான சில கருத்துக்களை கேட்டிருக்கிறார்கள். அரசு அந்த கட்டுப்பாடுகளை நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் பொழுது இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து இதுதான் முறை இப்படித்தான் சட்ட திட்டங்களை கையாள வேண்டும் அதை தான் அனைவரும் ஃபாலோ பண்ண வேண்டும் என்ற ஒரு தெளிவு கிடைக்கும். அதையெல்லாம் மனதில் வைத்து விஜய் போனார் என்றால் அப்போ என்னெல்லாம் அவர் பாலோ செய்கிறார் என்பது நமக்கு தெரிய வரும்.

உடனடியாக ஒரு பொதுக்கூட்டம் எல்லாம் வைத்து அரசியல் நகர்வை இன்னும் தீவிர படுத்த வேண்டும் என்ற விஜய் விரும்பியதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. எது எப்படியோ இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவர் அமைதிக்கான அந்த விலையையும் சேர்த்து அடுத்தடுத்த நகர்வில் கொடுத்தார் என்றால் சரியாக இருக்கும். அதுதான் அவருடைய கட்சிக்கும் நல்லது .அரசியல் களம் மெல்ல மெல்ல சூடாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் விஜய் என்கிற ஒருவர் மட்டும் தன் கட்சியை அமைதியாக வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரால் முடிந்த ஆறுதலையும் உதவிகளையும் செய்து இருக்கிறார். இந்த உதவியை காலம் முழுவதும் செய்வேன் என்ற உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார். அந்த உத்தரவாதத்தை அவர் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். இன்று கொடுத்த அந்த உத்தரவாதம் ஆறு மாதத்தில் மறந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு வருடத்தில் சுத்தமாக மறந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது .ஆனால் இந்த விஷயத்தில் அப்படியெல்லாம் செய்யாமல் சிஸ்டமேட்டிக்காக அதற்காக ஒரு குழுவை நியமித்து அந்தக் குழு அவர்களை தொடர்ந்து ஃபாலோ பண்ண வேண்டும் என்ற ஒரு திட்டத்தை அவர் ஏற்படுத்த வேண்டும். அதுதான் சரியாக இருக்கும் என அந்தணன் கூறியுள்ளார்.