பசும்பொன் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த பெண் காவலர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவா் 63வது குருபூஜை மற்றும் 118வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த தலைமை காவலர் கலைவாணி (வயது 41) பசும்பொனில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று நள்ளிரவு கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓய்வெடுத்து கொண்டிருந்த கலைவாணிக்கு திடீரென இருமல் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!