சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலத்தினர் கொண்டாடுகின்றனர். இந்த பூஜைக்காக ஏரி மற்றும் நீர் நிலைகளில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்திய போது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜார்க்கண்ட் முழுவதும் 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறை தெரிவிக்கையில், நேற்று திங்கட்கிழமை மட்டும் ஐந்து குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும், இதனால் திருவிழாவின் போது நீரில் மூழ்கி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதில் . மைனர் சிறுவன் ஒருவன் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட பலர் தனித்தனி சம்பவங்களில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஹசாரிபாக்கில், குங்குன் குமாரி (11) மற்றும் ரூபா திவாரி (12) ஆகிய இரு சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை கெரேதாரி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பேலாவில் உள்ள ஒரு கிராமக் குளத்தில் சாத் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தபோது மூழ்கி இறந்துள்ளனர். அவர்களின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மகேயும், கர்வாவில், சதார் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த 13 வயது ராகுல் குமார் திங்கள்கிழமை மதியம் டான்ரோ ஆற்றில் குளித்தபோது மூழ்கி இறந்துள்ளார். சிம்டேகாவில், பானோ காவல் நிலையத்திற்கு உட்பட்ட மயங்சோர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி திங்கள்கிழமை தனது வீட்டிற்குள் இருந்த ஒரு வாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் மற்றொருவர் நீரில் மூழ்கியுள்ளதோடு, திங்கள்கிழமை மாலை சாந்தில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சஹெர்பெரா அருகே உள்ள சுபர்ணரேகா ஆற்றில் 14 வயது சிறுவன் ஆர்யன் யாதவ் சாத் பூஜையின் போது அர்க்யா செலுத்திய பின்னர் மூழ்கியுள்ளான்.
அவனை காப்பாற்ற சென்ற பிரதீக் குமார் யாதவ் (19) மற்றும் சஞ்சய் சிங் (45) ஆகிய இருவரும் மேலும் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது.
மேலும், பிஷ்ணுபூர் கிராமத்தில் உள்ள சௌரா பாலம் அருகே திங்கட்கிழமை 16 வயது சிறுவன் ஒருவன் கால்வாயில் குதித்து காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை, சிம்தேகா மாவட்டத்தில் மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்துள்ளதோடு, மேலும் பலாமுவில் இதேபோன்ற சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளமை ஜார்கண்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.