மீன் சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்றுவலி... மருத்துவமனையில் அனுமதி!
Dinamaalai October 30, 2025 10:48 PM

கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரைப்பகுதியில் நவரை மீனை சாப்பிட்டதால் 35 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அப்பகுதியில் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள், சந்தையில் விற்பனை செய்யப்பட்ட சிவப்பு நிற நவரை மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து, 35க்கும் மேற்பட்டோர் நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் நவரை மீன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

மீனில் விஷத்தன்மை உள்ளதா அல்லது வேறு காரணமா என்பதையும் உறுதிப்படுத்த சுகாதாரத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதையடுத்து, மக்கள் கடலோர சந்தைகளில் மீன் வாங்கும்போது கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.