 
            இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர்.இளம்பரிதி தேர்வாகியுள்ளார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்த செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதிக்கு வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி கிராண்ட் மாஸ்டர் ஆன, தமிழ்நாட்டின் 35வது கிராண்ட் மாஸ்டர் ஆனார். தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.