 
             
 
உலக அரசியலை அதிரவைக்கும் வகையில் ரஷியா மீண்டும் அணுசக்தி சோதனையில் ஈடுபட்டுள்ளது. ‘புரெவெஸ்ட்னிக்’ எனப்படும் அதிநவீன ராக்கெட்டும், ‘போசைடன்’ எனப்படும் நீர்மூழ்கி அணு டிரோனும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக ரஷிய அதிபர் விலாதிமிர் புதின் அறிவித்துள்ளார். “இந்த டிரோன் 100 மடங்கு சக்திவாய்ந்த அணு என்ஜினுடன் இயங்குகிறது. எந்த எதிரி நாடும் கண்டறிய முடியாத வகையில் துல்லியமான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது,” என புதின் தெரிவித்தார்.
இந்த சோதனை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா இதனை கடுமையாக கண்டித்து, இது உலக அமைதிக்கே அச்சுறுத்தல் என கூறியுள்ளது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், “ரஷியாவின் தொடர் அணு சோதனைகள் கவலைக்குரியது. இதை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா தனது அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையைத் தொடங்க இருப்பது உலக அரசியல் தளத்தில் புதிய பனிப்போரை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ரஷியா–அமெரிக்கா இடையிலான இந்த அணு போட்டி, சர்வதேச அமைதி முயற்சிகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!