புதுக்கோட்டை மல்லாங்குடியில் பயங்கரம்; கணவனை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Seithipunal Tamil October 31, 2025 07:48 AM

புதுக்கோட்டை மல்லாங்குடியில் குடும்பத் தகராறில் கணவன் கொன்று புதைத்துவிட்டு சிகிச்சையில் இருப்பதாக மனைவி நாடகமாடியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது மனைவி மற்றும் அவரது 02 மகள்கள் போலீசாரலால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் பழனிவேலை வீட்டின் கழிவறை அருகே குழி தோண்டி மகள்களின் உதவியுடன் புதைத்துள்ளனர். பழனிவேலுக்கு கொழுப்புக் கட்டிகள் உள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக மனைவி மகாலட்சுமி அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

இந்நிலையில், நீண்ட நாள்களாக பழனிவேல் தன்னை தொடர்புக் கொள்ளாததால் அவரது சகோதரி காவேரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனது சகோதரரை காணவில்லை என பழனிவேலுவின் சகோதரி அளித்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் கிடுபிடி விசாரணையில் மனைவி மகாலட்சுமி, தனது கணவர் பழனிவேலுவை அடித்துக் கொன்றமை தெரியவந்துள்ளது.

அதற்கு உடந்தையாக இருந்த 02 மகள்களும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் பழனிவேலின் உடலைத் தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.