 
             
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். ஹீலி 5 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய எலிச் பெர்ரியுடன் லிட்ச்பீல்ட் சிறப்பான கூட்டணியை அமைத்தார்.

இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை சிரமப்படுத்தி 155 ரன்கள் சேர்த்தது. லிட்ச்பீல்ட் வெறும் 77 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான தளத்தை அமைத்தார். இறுதியில் அவர் 119 ரன்களில் அவுட்டானார். பெர்ரி 77 ரன்கள் எடுத்தார். கார்ட்னர் 63 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை 49.5 ஓவர்களில் 338 ரன்கள் என்ற பெரிய கணக்கிற்கு அழைத்துச் சென்றார்.இந்திய பந்துவீச்சாளர்களில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர், 339 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி துவக்கத்திலிருந்தே தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தபோதும், இந்திய வீராங்கனைகள் அதனை திறம்பட சமாளித்தனர்.
முடிவில், 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து இந்தியா அதிரடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியுடன் இந்தியா 13வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.வரும் ஞாயிற்றுக்கிழமை, இந்தியா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு உலகக்கோப்பை பட்டத்தை நோக்கி மோதவுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!