WhatsApp : வாட்ஸ்அப் சாட் பேக் அப்பில் வந்த அசத்தல் அம்சம்.. என்ன தெரியுமா?
TV9 Tamil News October 31, 2025 09:48 PM

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது தகவல் பரிமாற்ற தேவைகளுக்காக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் தரவுகள் பகிர்வது, தனிப்பட்ட தகவல்களை பகிர்வது உள்ளிட்டவற்றை செய்யும் நிலையில், அவர்களது சாட்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வாட்ஸ்அப் End – to – end Encryption அம்சத்தை கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த அம்சத்தில் பயனர்கள் பல காலமாக சந்தித்து வந்த சிக்கலுக்கு முடிவு காணும் வகையில் புதிய அம்சம் ஒன்றை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் சாட் பேக் அப்புக்கு இனி இவ்வளவு சிரமம் தேவையில்லை

வாட்ஸ்அப்பில் சாட் பேக் அப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் 64 டிஜிட்டல் கி வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இந்த 64 வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்வது சற்று கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக பயனர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில், அது குறித்து மெட்டா முக்கிய முடிவை எடுத்துள்ளது. சாட் பேக் அப்புக்காக டிஜிட்டல் கி-ஐ வைத்து சிரமப்பட வேண்டாம் என்பதால் மொபைல் பாகாப்பை அதில் அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : தவறாக இருந்தாலும் ஏஐ சாட்பாட்கள் உங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இனி 64 வார்த்தைகளை கொண்ட டிஜிட்டல் கி தேவையில்லை

முன்னதாக சாட் பேக் அப்பை பயன்படுத்த 64 வார்த்தைகள் கொண்ட டிஜிட்டல் கி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கை ரேகை, ஃபேஸ் ஐடி மற்றும் ஸ்கிரீன் லாக் ஆகியவற்றின் மூலம் எளிதாக ஓபன் செய்ய முடியும். ஸ்மார்ட்போனின் லாக்கை திறப்பது, பேமெண்டுகளுக்கு பாஸ்வெர்டு போடுவதை போல இந்த பேக் அப் அம்சத்தை திறப்பதையும் மெட்டா தற்போது மிகவும் சுலபமானதாக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க : OnePlus 15 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 15.. முழு விவரம் இதோ!

புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
  • நீங்கள் இந்த அம்சத்திற்கு மாறிய பிறகு உங்கள் வாட்ஸ்அப் பேக் அப் தானாகவே ஸ்மார்ட்போன் பாதுகாப்புக்கு மாறிவிடும்.
  • உங்களது பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் லாக் ஸ்கிரீன் தகவல்கள் மூலம் மிக சுலபமாக பேக் அப் அம்சத்தை பயன்படுத்தலாம்.
  • நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கினாலும், வாட்ஸ்அப் செயலியை நீக்கம் செய்துவிட்டு பிறகு மீண்டும் பதிவிறக்கம் செய்தாலும் உங்களுக்கு பழைய பாஸ்வேர்டுக்கான தேவை இருக்காது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.