வைகை எக்ஸ்பிரஸ் உட்பட பல ரெயில்கள் தாமதம்...! - தெற்கு ரெயில்வே வெளியிட்ட புதுப்பிப்பு பட்டியல்...!
Seithipunal Tamil November 01, 2025 05:48 AM

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக சில முக்கிய ரெயில்களின் சேவைகள் மற்றும் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பின் வருமாறு,"சென்னை – யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12292)
நவம்பர் 15ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரெயில், வழக்கமான இரவு 11.30 மணிக்கு பதிலாக 11.55 மணிக்கு புறப்படும். இதனால் பயணிகள் 25 நிமிட தாமதம் எதிர்பார்க்கலாம்.


வைகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12635)
சென்னை எழும்பூரிலிருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் தாமதமாக மதுரையை அடையும்.
மேலும், நவம்பர் 3, 5, 8, 12, 13, 15 ஆகிய தேதிகளில் புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிட தாமதத்துடன் பயணத்தை நிறைவு செய்யும் என ரெயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில் – காச்சிகுடா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16354)
நவம்பர் 8 மற்றும் 15ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில், வழக்கமான நேரத்தைவிட 3 மணி நேரம் தாமதமாக காச்சிகுடா சென்றடையும்.
ஹவுரா – சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12839)
நவம்பர் 12ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும் இந்த ரெயில், 55 நிமிட தாமதத்துடன் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடையும்.
சில்சார் – கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12516)
நவம்பர் 11ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து புறப்படும் ரெயில், 50 நிமிட தாமதத்துடன் கோவை வந்தடையும்.
சண்டிகார் – மதுரை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20494)
நவம்பர் 5ஆம் தேதி காலை 8.05 மணிக்கு சண்டிகாரில் இருந்து புறப்படும் இந்த ரெயில், 40 நிமிடம் தாமதமாக மதுரையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளதாவது,“பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவைகள் சீரமைக்கப்படுகின்றன. பயணிகள் முன்கூட்டியே தங்கள் ரெயில் நேரத்தை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.