இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது தஞ்சையைச் சேர்ந்த முகமதுமைதீன் (26) மற்றும் சென்னையைச் சேர்ந்த சாகுல்ஹமீது (50) ஆகிய இருவரின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்களின் உடைமைகளில் மேற்கொண்ட சோதனையில், 8 கிலோ ‘ஹைரோபோனிக்’ என்ற உயர்தர போதைப்பொருள் மறைத்து கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் போதைப்பொருளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். தாய்லாந்தில் இருந்து வாங்கப்பட்ட இந்த போதைப்பொருள் இலங்கை வழியாக மதுரைக்கு கடத்தப்பட்டதாகவும், இதன் இந்திய சந்தை மதிப்பு ரூ.8 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!