பொதுவாக நம் உடலில் மூட்டு வலி ஏற்பட பல்வேறு காரணம் உண்டு .அந்த வகையில் சிலருக்கு மூட்டுகள் தேய்மானத்தால் வரலாம் .இன்னும் சிலருக்கு வயோதிகம் காரணமாக வரலாம் .இன்னும் சிலருக்கு கீழே விழுந்து அடிபடுவதாலும் வரலாம் ,சிலருக்கு யூரிக் ஆசிட் பிரச்சினையால் வரும் மூட்டு வலியை எப்படி ஒரு வழி பண்ணலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.மனித உடலில் இருந்து வெளியேறும் நச்சான ஒரு கழிவு வகை தான் யூரிக் ஆசிட் என்னும் ஒரு கழிவு வகையாகும் .
2.இந்த யூரிக் ஆசிடைதான் சிறுநீரகம் சுத்திகரித்து வெளியேற்றி நம் ஆரோக்கியத்தை காக்கிறது .
3. சிறுநீரகமானது இந்த யூரிக் ஆசிடை வெளியேற்றவில்லை என்றால் நம் கை கால் விரல்களின் முட்டியில் பாதிப்பு ஏற்படும்.
4.இந்த யூரிக் ஆசிட் பாதிப்பால் மூட்டு வலி வராமல் இருக்க பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
5.இந்த பாகற்காய் சாறில்தான் தான் இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, கல்சியம் மற்றும் பீட்டா கரோட்டின் ஏராளமாய் உள்ளது .
6.இந்த யூரிக் ஆசிட் அளவை பாகற்காய் ஜூஸ் குறைத்து நம் ஆரோக்கியம் காக்கிறது .
7.அது மட்டுமல்லாமல் இந்த பாகற்காய் சக்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஏற்படாமலும் தடுக்கின்றது.
8.ஆரோக்கியம் மிகுந்த பாகற்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
முதலில் பாகற்காயில் எலுமிச்சை சாற்றை கலந்து ஊற வைக்க வேண்டும்.
9.பின் பாகற்காயுடன் மாங்காய் துருவல் மற்றும் இஞ்சி சேர்த்து விட வேண்டும் .
10.அடுத்து தண்ணீர் ஊற்றி மிக்சியில் ஜூஸ் பதத்திற்கு அடிக்க வேண்டும் ,இதை வடிக்கட்டி உப்பு சேர்த்து தினமும் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிக்க வேண்டும்.