டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு
Webdunia Tamil November 01, 2025 05:48 AM

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) எம்எல்ஏ ரோஹித் பவார், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்படுவதை வெளிச்சத்திற்குக்கொண்டு வந்தார்.

வாக்குத் திருட்டு மற்றும் போலி வாக்காளர் பதிவுகள் குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவே, ஒரு குறிப்பிட்ட இணையதளம் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டதாக ரோஹித் பவார் விளக்கம் அளித்தார்.

இருப்பினும், போலி ஆதார் அட்டையை தயாரித்த காரணத்துக்காக, ரோஹித் பவார் மீதும், அந்த இணையதளத்தை உருவாக்கியவர்கள் மீதும் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆதார் அட்டை பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பிய எம்எல்ஏ மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது, மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.