 
             
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாநகராட்சியின் முதல் மேயர் அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் நாயுடு ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்கு பிறகு 5 முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து சித்தூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 17 அன்று, அலுவலகத்தில் இருந்த அனுராதா மற்றும் மோகன் நாயுடு ஆகிய இருவரையும் முகமூடி அணிந்த கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றது. குடும்ப பகையின் காரணமாக, உறவினர்களான சந்திரசேகர் மற்றும் வெங்கடாசலபதி ஆகியோர் கூலிப்படையை வைத்து இந்த கொலையை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மொத்தம் 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 18 பேர் விடுவிக்கப்பட்டனர். சின்ட்டு நாயுடு, வெங்கடாசலபதி உட்பட 5 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பால் சித்தூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran