 
            OpenAI நிறுவனம் இந்தியர்களுக்கு சூப்பர் ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி முதல், ChatGPT Go-வை ஒரு வருட காலத்திற்கு முழுக்க முழுக்க இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
உண்மையில், இதன் விலை ரூ.399 ஆகும்.
"அதிக இந்திய மக்கள் எளிதில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவின் பயன்களை அனுபவிக்க சாட் ஜிபிடி கோவை இலவச சலுகையை வழங்குகிறோம்.
இது அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நாட்டின் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக அமையும்" என்று ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
 ChatGPT Go யார் யார் பயன்படுத்தலாம்?
 ChatGPT Go யார் யார் பயன்படுத்தலாம்? 
இந்தச் சலுகைக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். அது நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.
இந்தச் சலுகையை ஆக்டிவேட் செய்வது எப்படி?முதலில், ChatGPT-ஐ டௌன்லோடு செய்துகொள்ளுங்கள்.
லாகின் செய்து, 'Upgrade' அல்லது 'Plan' என்கிற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். புதிதாக, சாட் ஜிபிடி பயன்படுத்துபவர்கள் உங்களது தகவல்களை ரெஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக, 'Free for one year (India offer) starting November 4' என்கிற ஆப்ஷன் இருக்கும், அதை கிளிக் செய்து 'Activate' என்பதை கொடுக்கவும்.
பிறகு, 'Get Started' கொடுத்து, சாட் ஜிபிடி கோவின் அனைத்து வசதிகளையும் இலவசமாக பயன்படுத்த தொடங்கலாம்.
இதில் என்ன சிறப்பம்சம்?இலவச சாட் ஜிபிடியை விட, பத்து மடங்கு அதிக அளவில் இந்த வெர்ஷனைப் பயன்படுத்த முடியும். அதே போல, பத்து மடங்கு அதிகமான புகைப்பட உருவாக்கமும் செய்துகொள்ளலாம்.
இந்தச் சலுகை இந்தியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பதால், இந்திய மொழிகளுக்கு யூசர் ஃபிரெண்ட்லியாக இருக்கும் என்று கூறப்படுகிறது".